“ஒபிஎஸ், டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியில் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

பொங்கல் பண்டிகைக்கு பின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிறக்கட்சிகள் இணையும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அதிமுக, பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்து சமூக ஊடகங்களில் வரும் தகவல் உண்மை அல்ல. தவறான செய்தி. கூட்டணி குறித்து விவாதம் மட்டும் நடைபெற்றது.

பொங்கல் பண்டிகைக்கு பின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிறக்கட்சிகள் இணையும். பொருத்து இருங்கள். பொங்கல் இன்னும் வரவில்லை தை பிறந்த உடன் பதில் கிடைக்கும். ஒபிஎஸ், டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இல்லை. ஒபிஎஸ் தனது கருத்தை சொல்லி உள்ளார். பொதுவாக அரசியலை பொருத்தவரை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளது. 24 மணி நேரத்திற்குள் கூட பல்வேறு மாற்றங்கள் வரலாம்.

கிருஸ்துமஸ் விழாக்கு வாழ்த்து சொல்லும் முதலமைச்சர் ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வது இல்லை. இது போலி மதச்சார்பின்மையை காட்டுகிறது. மக்கள் விரோத ஆட்சி வெகு விரைவில் அகற்றப்படும். திமுகவுக்கு, தவெகவுக்கும் தான் போட்டி என விஜய் சொல்லி வருகிறார். தம்பி விஜய் எது வேண்டுமானாலும் பேசலாம். இது சினிமா அல்ல.

தேர்தல் தேதி அறிவிக்கனும், வேட்பாளர் போடனும். வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்கனும், பூத் பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்கனும், முதலில் பூத் பொறுப்பாளர்கள் இருக்கனும்.10 வேட்பாளர் பெயரை விஜய் சொல்ல முடியுமா. திமுகவுக்கு எதிராக ஒத்த கருத்து உள்ள கட்சிகள் இணைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.