கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அக்கட்சியின் துணை தலைவர் ஆர்.மகேந்திரன் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதிக்கான அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 1947 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இருந்த அரசியல், நாடு சம்மந்தப்பட்டது என்றும், தற்போதுள்ள அரசியல், நரி தந்திரம் என்றும் விமர்சித்தார். அரசியல் தொழில் அல்ல, அது தன் கடமையாக மாறி உள்ளதாகவும், தன்னுடைய தேர்தல் யுக்தி என்பது தன்னுடைய நேர்மை எனவும் கமல்ஹாசன் கூறினார். கோவை பாஜக ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டது குறித்த கேள்விக்கு, இதற்கு பதில் சொல்வது தனது தரத்தை குறைத்துவிடும் என்றும், அதற்கு மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.







