தமிழ் நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில் திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. 2021 ஆம் தேர்தலில் திமுக கூட்டணில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 25 தொகுதிகளில் பேட்டியிட்டது.
2026 ஆம் தேதலுக்கான தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கூடுதலான தொகுதிகள் கோரியதாகவும் அதற்கு திமுக உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் விஜயின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன் படி திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.







