விசிகவை தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவு வழங்கியது IUML!

விசிகவை தொடர்ந்து ஐ.யூஎம்.எல், தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.

தமிழ்நாட்டில் நடத்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் தவெக 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது.

இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது. இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. இந்த நிலையில் தவெகவின் பலம் 118-ஆக உயர்ந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக IUML-லும் நிபந்தனையற்ற ஆதரவை தவெகவிற்கு தெரிவித்துள்ளது. இதனால் த.வெ.க.வின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்து ஆதரவு எண்ணிக்கையை காண்பித்து ஆட்சியமைப்பதற்கான உரிமையை கோர உள்ளார். ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கும் பட்சத்தில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.