பீகாரில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் 10 வது முறையாக மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
மேலும் அதிக இடங்களை வென்றக் கூட்டணி கட்சியான பாஜகவின் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றனர்,
இந்த நிலையில் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஊடங்களில் வெளியான தகவலின் படி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நடக்கவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார் எனக் கூறப்படுகிறது.
மேலும் பீகார் முதலமைச்சர் பதவிக்கு பாஜகவில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும்; நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (மார்ச் 5) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.







