முதல் அரையிறுதிப் போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு….!

டி 20 உலக கோப்பை தொடரின் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகளை கடந்து இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அதன் படி இன்று தொடங்கும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது.

இதில் டாஸ் வென்ற நியூசிலந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியை பொருத்தவரை க்வேனா மபாகாவு, அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ஜார்ஜ் லிண்டே ஆகியொருக்கு பதிலாக மார்கோ ஜான்சன், காகிசோ ரபாடா, கேஷவ் மகாராஜ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல நியூசிலாந்து அணியில் இஷ் சோதிக்கு பதிலாக ஜேம்ஸ் நீஷம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம் 

நியூசிலாந்து : டிம் சீஃபர்ட் (WK), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர் (C), ஜேம்ஸ் நீஷம், கோல் மெக்கோன்சி, மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன்.

தென் ஆப்பிரிக்கா : ஐடன் மார்க்ராம் (C), குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன் (WK), டெவால்ட் பிரெவிஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், காகிசோ ரபாடா, கேஷவ் மகாராஜ், லுங்கி நிகிடி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.