நாற்பது நாட்கள் இடைவெளிக்கு பின், தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்ததால் அனைத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி முதல், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், சமீப நாட்களாக தொற்று பரவல் குறைந்துள்ளதால், பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 40 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளில், 100 சதவீத மாணவர்களையும் அமர வைத்து, பாடங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கியமாக வகுப்பறையில் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருப்பது, உரிய சமூக இடைவெளியை பின்பற்றுவது, மாணவர்கள் கூட்டாக அமர்ந்து உணவருந்த தடை போன்ற பல வழிக்காட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மாணவர்களின் நலன் காக்க சிறார்களுக்கான தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்று முதல் கடற்கரைகளுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.








