பட்ஜெட் 2022: நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.…

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. காலை 11 மணி அளவில் நாடாளுமன்றம் கூடியதும் முதல் நிகழ்வாக நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது நிதிநிலை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பெருந்தொற்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீட்பதற்கான முக்கிய நடவடிக்கைகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் அம்சங்களும் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பட்ஜெட் தாக்கலில் கொரோனா காரணமாக, நாளைய தினம், முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிக்கும் ஜீரோ ஹவர் மற்றும் கேள்வி நேரம் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.