தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநறையூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் ரத்தினம். இவரது மகன் ரமேஷ் (வயது 56). இவர் திருவாரூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளி முடித்து மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கு திருநறையூரில் டியூஷன் எடுத்து வந்தார். ஏராளமான மாணவர்கள் அவரிடன் டீயூஷன் படித்தாக கூறப்படுகிறது. அந்த வகையில், அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் (வயது 16) மாணவியும் இவரிடம் டீயூஷன் படித்து வந்தார்.
இதையும் படியுங்கள் : ’சூர்யா 45’ படத்தின் டைட்டில் இதுதான்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
இந்த மாணவிக்கு ரமேஷ் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது. மாணவி இது குறித்து தனது பெற்றோர்களிடம் தெரிவித்தார். உடனடியாக மாணவியின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ரமேஷை காவல்துறையினர் போக்சோ
சட்டத்தில் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.








