ராமநாதபுரத்தில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!

ராமநாதபுரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மேட்டு தெருவில் வசிக்கும் கிழவன் (45), மற்றும் அவரது மனைவி ஜோதி முத்து (40). இவர்கள் இருவரும் அருப்புக்கோட்டையில் இருந்து இருசக்கர வாகனத்தில் கமுதி நோக்கி வந்துள்ளனர். அப்போது கீழராமநதி என்னும் இடத்தில் ஜல்லி ஏற்றி வந்த லாரி டயர் பழுதானதால் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை கவனிக்காமல் வந்த இருசக்கர வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.