இந்தோனேசியா – முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோ நகரில் ‘வெர்தா தாமய்’ என்ற முதியோர் இல்லம் இயங்கி வந்தது. இந்த நிலையில் முதியோர் இல்லத்தில் நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. அப்போது பெரும்பாலான முதியவர்கள் தங்கள் அறைகளில் உறங்கிக் கொண்டிருந்ததால், பலர் தங்கள் அறைகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து முதியோர் இல்லத்தில் இருந்த சுமார் 30 பேரில் 12 முதல் 15 பேர் வரை பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 16 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மூன்று பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்து இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.