பள்ளி விடுமுறை: சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்…

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை தொடர்பான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்…

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை தொடர்பான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்  என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – டிசம்பர் 3ம் தேதிக்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க இபிஎஸ் உத்தரவு.!

அதனை தொடர்ந்து நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மாணவர்களின் பாதுகாப்பு, உள்ளூர் வானிலை நிலவரம், உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை குறித்து முடிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர்கள் ஜானி டாம் வர்கீஸ், மகாபாரதி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.