கொழும்புவிற்கு மழை அறிவிப்பு ; இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் நிலை என்ன……?

இந்தியா – பாகிஸ்தான் மோதும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மழைக்கு அதிகம் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10 வது டி 20 உலகக்கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள தொடரில் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இன்று நடைபெறும்  27வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இந்தியா vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 7:00 மணிக்கு தொடங்குகிறது. மேலும் டாஸ் மாலை 6:30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் போட்ட நாளான இன்று கொழும்புவில் மழை பெய்யக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இலங்கை வானிலை ஆய்வுத் துறையின் வெளியிட்டுள்ள பதிவில், கொழும்பிவில் பிற்பகல் 2:00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலை 7:00 மணியளவில் மழையானது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சில வானிலை தகவலகள் இரவு 9 மணி வரை மழை தொடரலாம் என்று கூறுகின்றன.

குழு நிலை போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் இல்லை. இதனால் கொழும்பில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.