அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – டிசம்பர் 3ம் தேதிக்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க இபிஎஸ் உத்தரவு.!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் டிசம்பர் 3ம் தேதிக்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட…

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் டிசம்பர் 3ம் தேதிக்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக சார்பில் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துமாறு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார். அப்பணிகளை காண்காணிக்க மாவட்ட
பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்றன. இதுகுறித்து ஆய்வு
செய்வதற்காக, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க வேண்டும் என்று
அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
உத்தரவிட்டுள்ளார். பொங்கலுக்கு பிறகு சுற்றுப்பயணத்தை நடத்த திட்டமிட்டு
இருப்பதாகவும், ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டை நிறுத்த உள்ளதை கண்டித்து 25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது. நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.