ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் மேலும் நான்கு பேர் உள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படையினர் ஹரியானவில் இருப்பதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகர் ரவுண்டானவில் நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து புறக்காவல் நிலையம் மற்றும் 60 சிசிடிவி கேமராக்களை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கொள்ளையர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் நான்கு பேருக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படையினர் ஹரியானவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.







