முக்கியச் செய்திகள் தமிழகம்

நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வீடுகள் கட்டித்தர அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வீடுகள் கட்டித்தர அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூரணி பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து வாழ்வதற்கு வழி இல்லாத நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பு கடந்த 27ம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் இந்த பிரச்சினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா அவர்களின் கவனத்திற்கு நியூஸ்7 தமிழ் சார்பில் கொண்டு செல்லப்பட்டது.

காட்டூரனி பகுதி மக்கள்

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் காட்டூரணி பகுதிக்கு நேரடியாக அரசு அதிகாரிகளுடன் சென்று பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்பு சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் உடனடியாக இது குறித்து ஆய்வு செய்து வீடுகள் கட்டி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

நியூஸ்7 தமிழுக்கு நன்றி தெரிவித்த மக்கள்

மேலும் இதை தொடர்ந்து திருவாடனை, அண்ணாநகர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள மாவட்டம் முழுவதும் உள்ள நரிக்குறவ மக்களின் முழு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் காட்டுப்பகுதியில் நாளை காலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement:

Related posts

உள்இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார் நீதிபதி முருகேசன்!

Gayathri Venkatesan

“கர்ணன் வருவான், சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்” – நடிகர் தனுஷ்

Jeba Arul Robinson

ஆன்லைன் சூதாட்ட தடை: சட்டமுன் வடிவு நிறைவேறியது!

Niruban Chakkaaravarthi