ஏடிஎம் கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி

ஏடிஎம் கொள்ளையில், தொடர்புடைய மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில்…

ஏடிஎம் கொள்ளையில், தொடர்புடைய மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அர்ஷ் மற்றும் அவனது கூட்டாளி வீரேந்திர ராவத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த கொள்ளையில் தொடர்புடைய மூன்றாவது நபர் நசீம் உசேன் என்பவனை அரியானாவில் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இதற்கிடையே, கொள்ளைச் சம்பவத்தின் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களை சேர்ந்த இரண்டு கொள்ளை கும்பல்கள் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளன. இரண்டு குழுக்களிலும் தலா 15 கொள்ளையர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். நாடு முழுவதும் ஜீப்பில் பயணம் செய்து இந்த கொள்ளை கும்பல் நோட்டம் விட்டு கைவரிசையை காட்டி வந்துள்ளது.

மேலும் லாரிகள் மற்றும் விமானம் மூலமும் பயணம் செய்துள்ளனர். பேருந்து ரயில் பயணங்களை தவிர்த்து வந்துள்ளனர். இந்த கும்பல் பயன்படுத்திய ஜீப்பை பறிமுதல் செய்துள்ள போலீசார், அதனை சென்னைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.