திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேக விழாவில், பங்கேற்று சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
இந்நிலையில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்குச் சென்ற அவர், 108 சங்காபிஷேக விழாவின் பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலில் அமர்ந்து அவர் தியானம் செய்தார்.







