புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 7,172 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று 7 ஆயிரத்து 172 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தொடர்ந்து 4…

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று 7 ஆயிரத்து 172 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. சுமார் 100 இடங்களில் நடத்தப்படும் தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று மாநிலம் முழுவதிலும் 7 ஆயிரத்து 172 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 212 நபர்களும், காரைக்காலில் 765 நபர்களும், ஏனாமில் 109 நபர்களும், மாகேவில் 56 நபர்களும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர், மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஒவ்வாமை போன்ற எவ்வித எதிர்வினையும் வரவில்லை என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.