மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று கட்டுக்கங்காமல் செல்வதால், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து 2 நாட்களுக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுவதால், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நேற்று மும்பை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தாதர் பகுதி பொதுமக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல, நாக்பூரிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் உத்தவ் தாகரே காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாரத்துறை அமைச்சர் ராஜேஷ், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து வரும் 14-ஆம் தேதிக்குப் பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.







