சேலம் ஆத்தூர் திமுக வேட்பாளர் மாற்றம்!

சேலம் ஆத்தூர் தனித் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலினுக்கு பதிலாக சி. சின்னதுரை என்பவர் போட்டியிடப்போவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர்கள் படியலை கடந்த…

சேலம் ஆத்தூர் தனித் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலினுக்கு பதிலாக சி. சின்னதுரை என்பவர் போட்டியிடப்போவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர்கள் படியலை கடந்த மார்ச் 12ம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. மேலும் 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது. 61 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தை கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தனர். இந்நிலையில் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பட்டியலில் சேலம் ஆத்தூர் தனித் தொகுதியில் ஜீவா ஸ்டாலின் என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று திமுகவின் தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலினுக்கு பதிலாக சி. சின்னதுரை என்பவர் சேலம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.