“சாம்பியனோட உண்மையான வலிமை பதக்கங்களில் மட்டும் இல்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விளையாட்டு துறையின் சாதனை புரிந்த இளம் வீரர், வீராங்கனைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

விளையாட்டு துறையின் சாதனை புரிந்த இளம் வீரர், வீராங்கனைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சாம்பியனோட உண்மையான வலிமை பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற ஒழுக்கம், அழுத்தத்தை கையாளுகின்ற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும் தான் இருக்கு!

தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம இளம் விளையாட்டு வீரர்கள் கூட பேசினப்போ, அவங்களோட தெளிவையும், நம்பிக்கையையும் பார்த்து மிரண்டு போயிட்டேன். அடுத்த நிலை கவனம்!

இவங்க வெறும் விளையாட்டை மட்டும் விளையாடல, நம்ம தமிழ்நாட்டோட எதிர்கால மரபை உருவாக்கிட்டு இருக்காங்க. இதனால் தான் நம்ம இளைஞர்கள் மேல எனக்கு எப்பவும் ஒரு தனி நம்பிக்கை உண்டு”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.