கல்விக் கடனில் தமிழகம் முதலிடம்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகளவில் கல்விக் கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்துள்ளார். மாநிலங்கள் வாரியாக கல்விக் கடன் பெற்ற மாணவர்கள்…

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகளவில் கல்விக் கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் வாரியாக கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் எத்தனை பேர்? கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்கள் எத்தனை பேர்? கடனை வசூலிக்க தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளை தமிழக எம்பி கார்த்தி சிதம்பரம் நேற்று மக்களவையில் எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘கடந்த ஆண்டு வரை நாடு முழுவதும் 24,84,397 மாணவர்கள் ரூ.89,883.57 கோடி கல்விக் கடன் பெற்றுள்ளனர். இதில் 9.55 சதவிகிதம் வராக் கடனாக உள்ளது.

கல்விக் கடனை அதிகளவில் பெற்ற மாநிலங்களிள் தமிழகம் முதல் இடத்திலும், கேரளா இரண்டாம் இடத்திலும் புதுச்சேரி மூன்றாம் இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் 6,97,066 மாணவர்கள் ரூ 17,193.58 கோடி கல்விக் கடன் பெற்றுள்ளனர். இதில் 20.30 சதவிகிதம் வராக் கடனாக உள்ளது.

இதுபோல், கேரளத்தில் 3,25,703 மாணவர்கள் ரூ10,236.12 கோடி கல்விக் கடன் பெற்றுள்ளனர். இதில் 13.64 சதவிகிதம் வராக் கடனாக உள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் 18,311 மாணவர்கள் ரூ 481.80 கோடி கல்விக் கடன் பெற்றுள்ளனர். இதில் 19.37 சதவிகிதம் வராக் கடனாக உள்ளது.

கல்விக்கடன் குறைவாக பெற்ற மாநிலம் பிகாராகும். ஆனால் வாராக் கடன் விகிதத்தில் பிகார் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வராக் கடனை வசூலிக்க 2008-ல் ரிசர்வங்கி தனியார் நிறுவனங்களை நியமனம் செய்தது. அதனைத்தொடர்ந்து எழுந்த புகாரில் சட்டவிரோதமாக கடனை வசூலிக்ககூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.