முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

கிராமி 2021: வெற்றியாளர்கள் பட்டியல்- வரலாற்றில் இடம் பிடித்த பியான்ஸெ, மேகன் தீ ஸ்டாலியன்.

63வது கிராமி விருது விழாவில் அதிக விருதுகளை குவித்தார் சர்வதேச பெண் பாடகி பியான்ஸெ.

சர்வதேச அளவில் இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான, ஆஸ்கர் விருது போல கருதப்படும் கிராமி விருது ஆண்டுதோறும் சிறந்த இசை கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நடப்பாண்டின் விருது தற்போது வழங்கப்பட்டுள்ளது.


இதுவரை அதிக கிராமி விருதுகளை பெற்று சாதனை படைத்திருந்த சர்வதேச இசை ஆல்பம் பாடகி ஆலிஸன் கிராஸின் சாதனையை தற்போது முறியடித்துள்ளார் பியான்ஸெ. முன்னதாக ஆலிஸன் கிராஸ், பிளாக் பரேட் எனும் ஆல்பத்திற்கு தனது 28வது கிராமி விருதினை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது, இதுவரை அதிக கிராமி விருதுகளை பெற்று சாதனை புரிந்த பாடகி ஆலிஸன் கிராஸை விட அதிக கிராமி விருதுகளை வென்று குவித்துள்ளார் பியான்ஸெ. சென்ற வருடம் (2020) நடந்த கிராமி விருது வழங்கும் விழாவில் பில்லி ஐலிஷ், டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் எச்.இ.ஆர் ஆகிய மூன்று அமேரிக்க பாடகிகளும் மூன்று முக்கிய விருதுகளை தட்டிச் சென்றார்கள்.
தற்போது, அம்மூன்று முக்கிய விருதுகளான சிறந்த கலைஞர், சிறந்த ராப் பாடல் மற்றும் சிறந்த ராப் பெர்ஃபாமர் என்று (சேவேஜ்) எனும் பாடலுக்காக தனிச்சையாக மேகன் தீ ஸ்டாலியன் மூன்று கிராமி விருதுகளை தட்டிச் சென்றார். “நீங்கள் இவ்வனைத்திர்க்கும் தகுதியானவர்” என்று பில்லி ஐலிஷ் தனது உறையில் குறிப்பிட்டுள்ளார்.


சிக் கொரியா என்ற அமேரிக்க ஜாஸ் இசையமைப்பாளர் சிறந்த Improvised Jazz Solo- விற்க்காக போஸ்துமஸ் என்னும் விருதை வென்றுள்ளார். ஜான் பிரைன் என்ற அமேரிக்க பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகரானவர், ரெகார்டிங் அகாடமியிலிருந்து சிறந்த (ரூட்ஸ் பெர்ஃபாமன்ஸ்) மற்றும் சிறந்த (ரூட்ஸ் பாடல்) என்ற இரண்டு விருதுகளை வென்றுள்ளர். இவர் சென்ற வருடம் தனது 73ஆம் வயதில் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதர கிராமி விருது வெற்றியாளர்கள்:


நடப்பாண்டின் சிறந்த பெர்ஃபாமன்ஸ்: ஃபியோனா ஆப்பிளின் (ஷமெய்க்கா பாடல்)
நடப்பாண்டின் சிறந்த R&B ஆல்பம் : ஜான் லெஜண்டின் (பிக்கர் லவ்)

நடப்பாண்டின் சிறந்த பாப் வோகல் ஆல்பம்: டூவ லிப்பாவின் (ஃப்யூச்சர் நாஸ்டால்ஜியா)
நடப்பாண்டின் சிறந்த ராக் பாடல்: பிரிட்டனி ஹாவர்டின் (ஸ்டே ஹை)

Advertisement:
SHARE

Related posts

எல்.முருகன் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்: நடிகை கவுதமி!

Ezhilarasan

வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்!

Jeba Arul Robinson

லாரி, பேருந்து, கார் அடுத்தடுத்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழப்பு

Arivazhagan CM