விருதுநகர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி கண்மாய்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதனையும் படியுங்கள்: உங்க செல்ல பிராணிக்கு உடம்பு சரியில்லையா? வீடு தேடி வரும் இலவச கால்நடை மருத்துவ சேவை!
கூட்டத்தில் கலந்துக் கொண்ட விவசாயிகள் ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், அளவுக்கு அதிகமாக அரசு அனுமதியின்றி கண்மாய்களிலிருந்து மணல் திருட்டு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். மேலும் இந்த மணல் திருட்டை ஸ்ரீவில்லிபுத்துார் வட்டாட்சியர் கண்டுகொள்வதில்லை எனவும் இதனால் அரசுக்கு 4 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதனையும் படியுங்கள்: மாணவர்கள் நேரத்தை கணக்கீடு செய்ய வேண்டும்- நியூஸ் 7 தமிழ் கல்வி கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு
விருதுநகர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து ஒரு மூட்டைக்கு ரூபாய் 40 கூடுதலாக சுமை துாக்கும் தொழிலாளர்கள் வாங்குவதையும், கண்மாய் ஆக்கிரமிப்பு, வரத்துக்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தினர்.
–கே.ஆர்.அனகா







