ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் மீன் விற்பனை கூடத்தில், அழுகிய நிலையில் கிடைத்த 300 கிலோ மீன்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து, பரிசல் சவாரி செய்த பின்பு மீன் விற்பனை கூடத்தில் அம்மியில் அரைத்து சமைத்த சுவையான மீன் குழம்பை ருசித்து சென்றனர்
நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்க சமையல் தரம் குறைய தொடங்கியது. இந்நிலையில் பொது மக்களின் அளித்த அடுக்கடுக்கான புகார்களை உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்
கந்தசாமி மற்றும் வேலுச்சாமி ஒகேனக்கல் மீன்வள ஆய்வாளர் மற்றும் ஒகேனக்கல்
மீன்வள பணியாளர்கள் இன்று ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில்
சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் பல கடைகளில் இருந்து சர்வ சாதாரணமாக தரமற்ற அழுகிய நிலையில் கிடைத்த 300 கிலோ மீன்கள் மண்ணில் குழி தோண்டி கொட்டி அளிக்கப்பட்டன. மேலும், இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள், மீன் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி மீண்டும் இது போல் அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வந்தனர்
—ம. ஶ்ரீ மரகதம்







