தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரிய மனு: மத்திய அரசு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல்

தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரிய மனுக்களில் அனைத்து மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் பங்கேற்கச் செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில், தலைமை…

தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரிய மனுக்களில் அனைத்து மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் பங்கேற்கச் செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு , நாட்டில் தன் பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரிய மத்திய அரசின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரேபாலின திருமண விவகாரம் குறித்து விசாரிக்கும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்விடம் நேற்று நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு தரப்பில் ஒரே பாலின திருமணங்களின் சட்ட அங்கீகாரத்துக்கான கோரிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட நகர்ப்புற மேல்தட்டு வர்க்கத்தின் கருத்து மட்டுமே என்றும், இந்த விவகாரத்தை நீதிமன்றம் சட்ட ரிதீயாக மட்டுமே விசாரிக்காமல் நாடாளுமன்றத்தின் முடிவுக்கு விட்டு விட வேண்டும் எனவும் கூறியிருந்தது . சமூக ரிதீயாகவும், சமய ரீதியாகவும் ஒரே பாலின திருமணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பதை நாடாளுமன்றமும், மக்களும்தான் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக சரி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு, மாநிலங்களின் கருத்தை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளது . அதில் ஒரே பாலின திருமணம் செல்லுபடியாகும் என்பது குறித்து 10 நாட்களுக்குள் மாநிலங்கள் பதில் அளிக்க வேண்டும் என்று மோடி தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும் மாநில அரசுகளுடனான ஆலோசனை முடியும் வரை இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கோரியது. இருப்பினும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் சமர்ப்பிப்புகளுக்கு பதிலளித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எப்படி முடிவெடுப்பது என்று நீதிமன்றத்திடம் கூற முடியாது என்றும், மனுதாரர்களை விசாரிக்க விரும்புவதாகவும் கூறி, விசாரணையை வியாழக்கிழமைக்கு அதாவது நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.