பள்ளியை இடமாற்றம் செய்யப் போவதாக அறிவித்ததால் பெற்றோர் போராட்டம்!

சென்னை  அம்பத்தூர் அருகே பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பிரபல தனியார் பள்ளி இடமாற்றம் செய்ய போவதாக அறிவித்ததால் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் முருகப்பா ரெட்டி தெருவில் , பிரபல…

சென்னை  அம்பத்தூர் அருகே பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த
பிரபல தனியார் பள்ளி இடமாற்றம் செய்ய போவதாக அறிவித்ததால்
பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் முருகப்பா ரெட்டி தெருவில் , பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்.கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளி ஒப்பந்த அடிப்படையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்ததாக கூறப்படுகின்றது. ஒப்பந்த காலம் முடிவுற்றதை அடுத்து கட்டட உரிமையாளர் பள்ளியை காலி செய்ய கூறியுள்ளார்.

இதனால், பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற போவதாக
தனியார் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவர்களின்
பெற்றோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளியின் முன் திரண்டனர். மேலும்,
எல்.கே.ஜி முதல் செயல்பட்டு வந்த இந்த பள்ளி திடீரென மாற்றம் செயல்பட்டால்,
சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த அம்பத்தூர்
காவல் உதவி ஆணையர் கிரி தலைமையில், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருடன் போலீசார் தீர்வு காண
பேசி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.