செங்கம் அருகே பள்ளிக்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால், நடுவழியியே ஆசியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பித்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ராஜபாளையம் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதை அடுத்த இப்பள்ளி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளிக்குச் செல்லும் பாதை தனிநபருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் இருப்பதும் தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தின் உரிமையாளர்களான ராஜபாளையம் பகுதியை சார்ந்த ராஜா மற்றும் உத்தகுமார் பள்ளி மாணவர்களை தனது நிலத்தின் மீது செல்ல கூடாது என்று தடுத்துள்ளார்.
மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர சம்மதம் தெரிவித்தை அடுத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை நிலத்தின் உரிமையாளரன ராஜா மற்றும் உத்திரகுமார் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை இந்த பாதையில் செல்ல கூடாது என்று வழி மறித்துள்ளனர். பள்ளிக்கு செல்லும் பாதை மறிக்கப்பட்டதால், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நடு வழியே அமர்ந்து பாடம் கற்பித்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவம் அறிந்து வந்த புதுப்பாளையம் காவல்துறையினர் நிலத்தின் உரிமையாளரான ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காவல்துறையினர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி மாணவர்களின் பெற்றோர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் இப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கோ. சிவசங்கரன்
பள்ளிக்குச் செல்லும் பாதை துண்டிப்பு- நடுவழியில் பாடம் கற்கும் பள்ளி மாணவர்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: