முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

3 மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் – அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுராவில் கடந்த 16ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மேகாலயாவில் சேகியாங் என்ற தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்றது. திரிபுராவில் கடந்த 16ம் தேதி 88 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. நாகாலாந்து மாநிலத்தில் 8.94 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மேகாலயாவில் 74.32 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், 3 மாநிலங்களிலும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பில்லை. 3 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி : ”இந்தியாவில் இதுவே முதல்முறை…” – மணீஷ் சிசோடியா குறித்து கவுதம் கம்பீர் விமர்சனம்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: திரிபுராவில் பாஜக கட்சி சார்பாக முதலைமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார். நாகாலாந்தில் கூட்டணி ஆட்சி அமையும். மேகாலயாவில் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்து முடிவு செய்வோம். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஒரு கட்சி கூட காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கோ செல்ல மாட்டார்கள். தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பில்லை. இவ்வாறு ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘தி லெஜண்ட் சரவணா’ தெலுங்கு ட்ரையிலர் வெளியீடு

G SaravanaKumar

கொரோனாவால் மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 920பேர் உயிரிழப்பு!

G SaravanaKumar

துபாயில் முதலீடு செய்யத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்: இபிஎஸ்

EZHILARASAN D