முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் மனுக்களை நிராகரிக்கும் எண்ணிக்கை 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய தகவல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக மத்திய தகவல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2019-2020 காலாண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கமுடியாமல் நிராகரிக்கப்படும் மனுக்களின் எண்ணிக்கை 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேபோல் கடந்த 2005-06 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 13.9 சதவீதமாகவும் 2014 – 15 ஆண்டில் 8.4 சதவீதமாகவும் இருந்தது. ஆர்டிஐ மனுக்களுக்குப் பதில் அளிக்கமுடியாமல் நிராகரிக்கப்படும் பதில் மனுக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்துவருகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி நிராகரிக்கப்படும் 40 சதவீதமான மனுக்கள் போதுமான காரணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 90 சதவீதம் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் பெரும்பாலும் பிரதமரின் அலுவலகத்தின் சார்பில் நிராகரிக்கப்படுகிறது. தகவல் அரியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த 2019 – 2020 ஆண்டில் மட்டும் 13.7 லட்சம் மனுக்கள் மத்திய அரசின் சார்பில் பெறப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற மனுக்களின் 58,634 மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.


மத்திய தகவல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 20 சதவீதமானவை மனுக்கள் உள்துறை அமைச்சகம் சார்பில் நிராகரிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சகத்திலிருந்து நிராகரிக்கப்படும் மனுக்கள் கடந்த ஆண்டு 2 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் நிதித் துறை மட்டும் கடந்த ஆண்டு 10-ஆயிரம் ஆர்டிஐ மனுக்களை நிராகரித்துள்ளது. அதாவது நிராகரிக்கப்பட்ட முழு சதவிகிதமான 4.3 சதவீத மனுக்களில் 40% மான மனுக்கள் நிதித்துறையிலிருந்து மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் விண்ணப்பிக்கும் ஆர்டிஐ மனுக்களில் ஐந்தில் ஒரு மனுவை உள்துறை அமைச்சகம் நிராகரிப்பதாகவும் மத்திய தகவல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆர்டிஐ (RTI) சட்டத்தின் படி நிராகரிக்கப்படும் மனுக்கள் சதவீதம்
உள்துறை அமைச்சகம்: 20%
நிதித் துறை: 12%
உச்ச நீதி மன்றம்: 10%
டெல்லி உயர் நீதிமன்றம்: 12%
மின்சாரத் துறை :11%
விமான துறை: 11%
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை: 9%
டெல்லி காவல் துறை: 9%
தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை:8%
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்த்துறை: 8%

Advertisement:
SHARE

Related posts

கொரோனா 3வது அலை வராது என்று நாம் கூற முடியாது; துணைநிலை ஆளுநர் தமிழிசை

Ezhilarasan

இந்தியாவில் தங்கத்தின் தேவை 19% அதிகரிப்பு

Gayathri Venkatesan

மத்திய பிரதேசத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

Saravana Kumar