வெனிசுலா அதிபரின் பக்கத்தை முடக்கிய பேஸ்புக்!

கொரோனா பற்றி தவறான தகவல்களை பரப்பியதற்காக வெனிசுலா அதிபர் நிக்கோலா மதுரோவின் பேஸ்புக் பக்கத்தை அந்நிறுவனம் முடக்கியுள்ளது, கடந்த ஜனவரி மாதத்தில் வெனிசுலா அதிபர் தைம் செடியின் இலையில் இருந்து பெறப்படும் மருந்தான கார்வடிவிர்…

கொரோனா பற்றி தவறான தகவல்களை பரப்பியதற்காக வெனிசுலா அதிபர் நிக்கோலா மதுரோவின் பேஸ்புக் பக்கத்தை அந்நிறுவனம் முடக்கியுள்ளது,

கடந்த ஜனவரி மாதத்தில் வெனிசுலா அதிபர் தைம் செடியின் இலையில் இருந்து பெறப்படும் மருந்தான கார்வடிவிர் ஒரு அதிசயம். இது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. மேலும் இது எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என கூறினார். ஆனால், அவர் கூறியதை கொரோனா தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடும் மருத்துவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து வந்தனர்.

சமீபத்தில் இதுதொடர்பாக மதுரோ தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 19ம் நூற்றாண்டை சேர்ந்த வெனிசுலா மருத்துவர் ஜோஸ் கிரிகோரியோ ஹெர்னாண்டஸின் கார்வதிவிர் மருந்து குறித்து தெரிவித்துள்ளார். இந்த மருந்தை கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பேஸ்புக்கில் அதிபர் மதுரோ வெளியிட்ட வீடியோவை பேஸ்புக் நீக்கியுள்ளது. அத்துடன் மருத்துவர்களால் அங்கீகரிக்கப்படாத மருந்தை அவர் மக்களுக்கு பரிந்துரைத்துள்ளார். இது எங்களது கொள்கைக்கு எதிரானது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலை நாங்கள் பின்பற்றுகிறோம். மேலும், எங்கள் விதிகளை மீறி அவர் அடிக்கடி உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதால் அவரது பேஸ்புக் பக்கத்தை நாங்கள் 30 நாட்களுக்கு முடக்குகிறோம். இதனால், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது” என பேஸ்புக்கின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.