நாடு முழுவதும் ஒரே நாளில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 851 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் 4 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளதாக, உலக அளவில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா மரணம் ஏற்பட்ட நாடாக தற்பொழுது இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 3 லட்சத்து 89 ஆயிரத்து 851 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியை 19 லட்சத்தை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் இதுவரை 18 கோடியே 58 லட்சத்து 9 ஆயிரத்து 302 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







