இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை காரைக்கால் படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த…

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை காரைக்கால் படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தை
சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த ஆண்டு செப்டம்பர்
மாதம் 6ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 12 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

விசைப்படகில் கீழகாசாகுடிமேடு கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்ளிட்ட 12 மீனவர்கள் வழக்கம் போல் கோடியகரைக்கு தென்கிழக்கு பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களின் விசைப்படகு மற்றும் 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

இதனையும் படியுங்கள்: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கைது!

மேலும் மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து  இலங்கை திருகோணமலை நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். அதே போல நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த புலவேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 9 மீனவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நள்ளிரவு நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் மீனவர்களை கைது செய்தனர். 9 மீனவர்களை கைது செய்து, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து இலங்கை திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்த வழக்கு திரிகோணமலை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த
28ஆம் தேதி காரைக்கால் மற்றும் நாகை சேர்ந்த இரண்டு விசைப்படைகளையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எடுத்து விசைப்படகு உரிமையாளர்கள் படகுகளை மீட்டு மீண்டும் தமிழகம் கொண்டு வர இலங்கை செல்ல உள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகு விடுவிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.