டெல்லியில் பிரதமர் மோடியை அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பில்கேட்ஸ் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸை சந்தித்து உரையாடினார். பிறகு தொழில் தலைவர்கள் ரத்தன் டாடா, ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்டோரை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியை பில்கேட்ஸ் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், பில்கேட்ஸை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். சிறந்த மற்றும் நிலையான பூமியை உருவாக்குவதற்கான அவரது கொள்கை தெளிவாக தெரிகிறது எனக் கூறியுள்ளார்.
அண்மைச் செய்தி : ”திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி ஓ.பன்னீர்செல்வம்” – ஜெயக்குமார்
இந்த சந்திப்பு குறித்து பில்கேட்ஸ் கூறுகையில், பிரதமர் மோடியுடனான எனது சந்திப்பானது சுகாதாரம், மேம்பாடு மற்றும் காலநிலை ஆகியவற்றில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து முன் எப்போதையும் விட எனக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.