இலங்கையின் முக்கிய சிறைகளில் ஒன்றாகக் நீர்கொழும்பு சிறைச்சாலை கருதப்படுகிறது. இந்தச் சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சிறைச்சாலையில் நேற்று திடீரென வெடித்த மோதல் சில மணி நேரங்களிலேயே தீவிர வன்முறையாக மாறியுள்ளது. கலவரத்தை தொடர்ந்து, சிறை முன் கைதிகளின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் ஏற்கனவே 2 காவல் அதிகாரிகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, உயிரிழப்பு எண்ணிக்கை 30ஆக உயர்ந்த நிலையில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வன்முறை பரவியதைத் தொடர்ந்து, சிறைச்சாலை வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். இந்த மோதலுக்கான சரியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.




