உத்தரபிரதேசத்தில் கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், குற்ற சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் குற்ற நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பல்லியா பகுதியில் கட்சி பேரணியை தொடக்கி வைத்த பின் பேசிய அவர், கடந்த 70% சதவீத மோசடிகள், 29 சதவீத கொலைகள், 69 சதவீத கொள்ளை நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், யோகி ஆதித்யநாத்தின் சிறப்பான ஆட்சியால் 35 சதவீத கடத்தல் சம்பவங்கள் மற்றும் 52 சதவீத பாலியல் பலாத்காரங்கள் தவிர்க்கப் பட்டுள்ளதாக பேசினார்.
அப்போது மேலும் பேசிய அவர், அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் மாநிலமாக உத்தரபிரதேசம் இருந்துள்ளது. அவரை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். மக்களுக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?, எப்படி மக்களிடம் வந்து உங்களால் வக்கு கேட்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.








