உக்ரைனின் அண்டை நாடுகளில் கட்டுப்பாட்டு மையங்கள்

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க போலந்து உட்பட அண்டை நாடுகளில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையங்களை மத்திய வெளியவுறவுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில்,…

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க போலந்து உட்பட அண்டை நாடுகளில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையங்களை மத்திய வெளியவுறவுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 5 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

அதே நேரத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு அண்டை நாடுகளில் கடடுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் எல்லையில் உள்ள நாடுகளின் உதவியுடன் மீட்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

போலந்து, ரோமானியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவா குடியரசு ஆகிய நாடுகளின் வழியே வரும் இந்தியர்களை மீட்க உதவி எண்களுடன் கூடிய 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கட்டுப்பாட்டு மையங்களைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் வாட்ஸ் ஆப் எண்களும் அறிவிக்கப்பட்டுளளதாகவும், இது குறித்து விவரங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.