உக்ரைன்-ரஷ்யா இடையிலான பேச்சு வார்த்தையை வரவேற்பதாக ஐ.நா. பாதுகாப்பு சபை சிறப்பு கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சிறப்பு கூட்டத்தில் இந்திய தரப்பில் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ரஷ்யாவும் உக்ரைனும் பெலாரஸ் எல்லையில் பேச்சு வார்த்தை நடத்துவதாக அறிவித்துள்ளதை இந்தியா வரவேற்பதாகக் கூறினார்.
போரினால் ஏற்படும் வன்முறையை உடனடியாக நிறுத்துவதுடன், அனைத்துப் பகைமைகளுக்கும் இரு நாடுகளும் முடிவு கட்ட வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் எனத் தெரிவித்தார்.
உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தைக்கு திரும்பவும் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவவும் இந்திய பங்காற்றும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு சபை சிறப்பு கூட்டத்தில் டி.எஸ்.திருமூர்த்தி கூறினார்.