புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பில் உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் ரெம்டெசிவிர் உட்பட அனைத்து கொரோனா மருந்துகளும் போதுமான வகையில் உள்ளது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடத்தப்பட்டு வரும் சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்களை ஆய்வு செய்த அவர்,…

புதுச்சேரியில் ரெம்டெசிவிர் உட்பட அனைத்து கொரோனா மருந்துகளும் போதுமான வகையில் உள்ளது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடத்தப்பட்டு வரும் சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்களை ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புதுச்சேரி மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துகள் போதிய அளவில் உள்ளது. கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

பொதுமுடக்கத்தை செயல்படுத்தும் அளவில் நிலைமை இல்லை இருப்பினும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் பகுதி முடக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். உயிர்காக்கும் மருந்துகள் இல்லை என வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தமிழிசை சௌந்திரராஜன் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.