மறைந்த நடிகர் விவேக் நினைவாக 50 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளதாக அவருடன் 15 படங்களில் பணியாற்றிய திரைப்பட இயக்குநர் பி.டி. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் சந்திப்பில் விவேக்கின் திருவுருவ படத்திற்கு இயக்குநர் பி.டி. செல்வகுமார் மலை அணிவித்து அஞ்சலி செய்தார். கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மர கன்றுகளை பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ” நடிகர் விவேக்கின் நினைவாக 50 லட்சம் மர்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். விவேக் இன்று நம்மை விட்டு சென்றாலும் அவர் ஆன்மா சாந்தியடைய அவர் விட்டு சென்ற விதைகளை தூவும் பணிகளை தொடர சபதம் ஏற்போம். விவேக் திரைப்பட நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு போராளியாகவும், பசுமை போராளியாகவும் வாழ்ந்து இருக்கிறார்.” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசியவர், “அவர் ஒரு கோடி மரகன்றுகளை நடும் சமூக பணியை மேற்கொண்டார். அவர் கிட்டத்தட்ட 36 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். மீதமுள்ளதை நாம் தொடர்வோம். அதுவே அவருக்கு நாம் செய்யும் கடமை. அவரது சமூக சேவைகளை பாரட்டும் வகையில் அரசு அவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டமுன் வரவேண்டும்.” என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.







