DPL டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது!

மாற்றுத் திறனாளிகளுக்கான DPL டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய சென்னை அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில், முதன்முறையாக மாற்று திறனாளிகளுக்கான DPL டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கொல்கத்தா,…

மாற்றுத் திறனாளிகளுக்கான DPL டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய சென்னை அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

துபாயில், முதன்முறையாக மாற்று திறனாளிகளுக்கான DPL டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கொல்கத்தா, சென்னை, மும்பை, குஜ்ராத், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் தமிழக அணியான சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

துபாயில் இருந்து சென்னை திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா, மாற்று திறனாளிகளுக்கான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்றது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். இந்த போட்டிக்கு செல்ல நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோர் உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.