காரைக்கால் மீனவர்கள் 25 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்!

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கை காரைநாகர் எல்லைப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை 2 விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று இலங்கை காரைநகர் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 25 மீனவர்களை கைது செய்துள்ளது. கைது செய்தவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றதாகவும் விசாரணைக்கு பின்னர் மீனவர்களை படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.