முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதுச்சேரியில் என். ஆர். காங் -பாஜக கூட்டணி உறுதி!

புதுச்சேரி ரங்கசாமி தலைமையிலான என். ஆர். காங்கிரஸ் – பாஜகவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கூட்டணி இன்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என். ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட முடிவுச் செய்துள்ளது. மீதமுள்ள 14 இடங்களில் பாஜக – அதிமுக போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக இன்று நடைபெற்ற என். ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜகவுடனான கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

என். ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அப்போது முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்ககோரி என். ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சமாதானம் செய்ய ரங்கசாமி முயற்சித்தார். பின்னர் தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்து முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையெடுத்து என். ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைதியாக கலைந்துசென்றனர்.


புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து உள்ளதாகவும் எங்களுடைய கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ரங்கசாமி மற்றும் தலைவர்கள் தெரிவித்தனர். முன்னதாக புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என். ஆர். காங்கிரஸஇணைக்கும் முயற்சியில் பாஜக கடும் முயற்சியில் ஈடுபட்டுவந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தபோது என். ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியைத் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து பாஜக – என். ஆர். காங்கிர கூட்டணியில் நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என ரங்கசாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தால் பரிசீலித்து முடிவு: முதல்வர்

Nandhakumar

அழிவின் விளிம்பில் ஆப்பிரிக்க யானைகள்!

எல்.ரேணுகாதேவி

அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வருகிறார் சசிகலா

Nandhakumar