முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்!

அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் கட்சி ஆகிய கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தேமுதிகவுடன் இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது தேமுதிக சார்பில் கேட்கட்பட்ட தொகுதி எண்ணிக்கையும் தொகுதிகளையும் ஒதுக்காததால் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவிக்கையில், மாவட்ட கழகச் செயலாளர்களின் கோரிக்கை அடிப்படையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்துள்ளார் எனக் கூறினார்

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி டெபாசிட் இழக்கும் எனக் கூறிய அவர், அதிமுக -பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதை அடுத்து தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அஜித் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்

EZHILARASAN D

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட உலகத் தலைவர்கள்!

Saravana

சசிகலாவுடன் மீண்டும் இணையும் திவாகரன்….

Web Editor