புதுச்சேரியில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த லட்சுமிநாரயணன் இன்று என். ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் அக்கட்சியில் இணைந்தார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த லட்சுமிநாரயணன், கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் இருந்து விலகினார். இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் லட்சுமி நாராயணன், என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, காங்கிரசில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரசில் இணைந்த லட்சுமி நாராயணனை வரவேற்பதாக தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் ரங்கசாமி தெரிவித்தார்.