மக்கள் நலன் கருதி, பாஜக கூட்டணியில் என்ஆர். காங்கிரஸ் நீடிக்கும் என்று புதுச்சேரி மாநில பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில், அண்மையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலையில், ஆட்சி அமையும் என தெரிவித்தார். இது, அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, பாஜக – என்ஆர். காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு வருமாறு என்ஆர். காங்கிரஸ் கட்சிக்கு, திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், மக்கள் நலன் கருதி, பாஜக கூட்டணியில், என்ஆர் காங்கிரஸ் கட்சி நீடிக்கும் என்றம், கூட்டணி குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.







