மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி – சிக்கியது எப்படி?

தனியாக வசித்து வந்த மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்.. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஓடபள்ளிப் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் மார்ச்…

தனியாக வசித்து வந்த மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஓடபள்ளிப் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் மார்ச் மாதம் கரும்புக்காட்டில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்தார். இவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டு கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடினர்.

2 மாத கால இடைவெளிக்குள் மே12ம் தேதியன்று பள்ளிபாளையம் அருகே அண்ணா நகர் பகுதியில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியையும் பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லால் அடித்து கொலை செய்து தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இரு கொலைகளும் ஒரே பாணியில் நடந்திருந்ததால் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடினர்.

மே 22ம் தேதி அதிகாலை பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பிடிபட்ட இளைஞர் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பதும், கொலை செய்யப்பட்ட இரண்டு மூதாட்டிகளையும் பாலியல் துன்புறுத்தல் செய்து, நகைக்காக கொலை செய்ததும் தெரிய வந்தது

கைதான இளைஞர் செல்வம் சைக்கோ போல நடந்து கொண்டு இந்த 2 கொடூர கொலைகளை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பள்ளிபாளையம் போலீசார் செல்வத்தை குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்து 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இவரது பின்னணி என்ன? எதற்காக இதுபோன்ற கொடூர கொலையில் ஈடுபட்டார்? மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து சைக்கோ போல நடந்து கொண்டது ஏன்? என்ற கேள்விகளுக்கு போலீசாரிடட்ம எந்த பதிலும் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு விடை தேடும் வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பள்ளிபாளையம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.