கட்டனாச்சம்பட்டியை ராசிபுரம் நகராட்சியுடன் இணைப்பதைக் கண்டித்து 500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்துர் ஒன்றியம் கட்டனாச்சம்பட்டி
கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சுமார் 1000
குடும்பங்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தை ராசிபுரம் நகராட்சியுடன் இணைத்தால் பல வரி சுமைகளும், 100 நாள் வேலை திட்டமும் பறிபோகும் நிலை உருவாகும்.
தண்ணீர் வரி,குப்பை வரி, சொத்துவரி உயரும் அபாயம் உள்ளது. மேலும், வீட்டிற்கு வரி ரூ.2500 ல் இருந்து ரூ.4000 ரூபாய் வரை கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.பிரதமரின் ஊரக குடியிருப்பில் அனைத்து திட்டங்களும் ரத்து செய்யப்படும். தற்போது நகராட்சி உள்ள அனைத்து வரிகளும் எங்கள் கிராம மக்கள் சுமக்க முடியாது என முழக்கமிட்டு எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே ராசிபுரம் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினார்.







