‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

‘விஸ்வநாத் &சன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படத்தை ‘சித்தாரா எண்டெர்டயின்மண்ட்ஸ்’ தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை சுபலக்ஷ்மி பாடியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.